ஆஸி. விக்டோரியாவில் அவசர நிலை பிரகடனம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அங்கு இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலே அதுவே மிகக் கடுமையானது. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வரை கடுமையான 4ஆம் நிலைக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.

அங்கு, சமூக அளவிலான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக விக்டோரிய மாநில முதலமைச்சர் டானில் அன்ட்ரூஸ் தெரிவித்தார்.

நேற்றிரவு தொடங்கி அடுத்த ஆறு வாரங்களுக்கு மெல்பர்னில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடப்பில் இருக்கும். வீட்டிலிருந்து அவர்கள் 5 கிலோமீற்றர் சுற்றளவைத் தாண்டிச் செல்ல அனுமதி இல்லை.

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே, வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும்.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை