அவ்வப்போது மழை: சப்ரகமுவ, மத்திய, மேல், தென், வடமேல்

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளையிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Mon, 08/10/2020 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை