புதிய எம்.பிக்களுக்கு இருநாள் செயலமர்வு

25, 26ஆம் திகதிகளில்

புதிய பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள எம்.பிகளுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் இரண்டுநாள் செயலமர்வொன்று  இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்பிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை 25ஆம் திகதியும் நாளைமறுதினம் 26ஆம் திகதியும் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற குழு அறை 1இல் இந்த செயலமர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயலர்வு நடைபெறும். இதில் அனைத்து எம்.பிகளையும் பங்கேற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள எம்.பிகளுக்கு எதிர்கால பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கத்தை பெற்றுக்கொடுப்பதே செயலமர்வின் நோக்கமாகும். செயலமர்வின் பிரதான விருத்தினர்களாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்பிக்க தஸநாயக்க கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை