இஸ்ரேலுடன் உறவுக்கு சவூதி முன்நிபந்தனை

பலஸ்தீனத்துடன் சர்வதேசம் அங்கீகரிக்கும் அமைதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் வரை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

முதல் வளைகுடா நாடாக இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் இராஜதந்திர உறவை ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளும் அதனை பின்பற்ற வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கடந்த ஒருசில நாட்களாக அமைதி காத்து வந்த சவூதி அரேபியா அது பற்றி முதல் முறை மெளனம் கலைந்துள்ளது. பலஸ்தீன விவகாரம் தீர்க்கப்படும் வரை இஸ்ரேலுடனான உறவுக்கு சாத்தியம் இல்லை என்று சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் குறிப்பிட்டுள்ளார்.

உறவை ஏற்படுத்துவதற்கான முன்நிபந்தனையாக சர்வதேச உடன்பாடுகளின் அடிப்படையில் பலஸ்தீனத்துடன் அமைதி எட்டப்பட வேண்டும் என்று பெர்லின் நகருக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசர் தெரிவித்தார்.

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை