ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் அருந்தி உயிராபத்து

ரஷ்ய எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் அலெக்ஸி நவல்னி நேற்றுக் காலை நஞ்சூட்டப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த 44 வயதான நவல்னி நேற்றுக் காலை சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து மொஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சூடான திரவத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறினார்கள். அவர் நேற்றுக் காலை தேநீர் மட்டுமே அருந்தியதால், அதில் கலந்து குடித்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நவல்னி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அறிக்கையை இணைத்து ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை