Header Ads

ஆஸியில் இலவச தடுப்பு மருந்து

அவுஸ்திரேலிய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாய் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதற்குச் சுமார் 25மில்லியன் தடுப்பு மருந்துகள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

விக்டோரியா மாநிலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தடுப்பு மருந்து பற்றி அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது. 

விக்டோரியா மாநிலத்தில் நேற்று புதிதாக 216பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 12பேர் உயிரிழந்துள்ளனர். 

அவுஸ்திரேலியாவில் சுமார் 24,000 பேர் வைரஸ் தொற்றால் அவதிப்படுகின்றனர். அங்கு 450 பேர் உயிரிழந்தனர்.

Thu, 08/20/2020 - 11:44


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.