கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக கருத முடியாது

சமூகத்திற்குள்ளும் ஆபத்து என்கிறார் சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். 

கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டதென கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாதென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவவில்லையென்ற போதிலும் அது இடம்பெறும் ஆபத்தை நிராகரிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களென அவர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்ற போதிலும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆபத்து நீங்கிவிட்டதென கருதக்கூடாதென்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Wed, 08/26/2020 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை