அமெரிக்க விவகாரங்களை கவனிக்கும் கிம்மின் சகோதரி

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் தனது அதிகாரங்கள் சிலவற்றைத் தன்னுடைய இளைய சகோதரி கிம் யோ ஜொங்கின் அதிகாரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அதன்படி தென் கொரிய, அமெரிக்க விவகாரங்கள் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது கிம்மின் பணிச் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைதான் என்ற உளவு அமைப்பு, கிம்மிற்கு உடல்நலக் குறைவு என்ற கூற்றை மறுத்துள்ளது.

முன்னதாக உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில் அவருடைய சகோதரி கிம் யோ ஜொங்க் ஆட்சியை நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை