அச்சமின்றி வாக்களிக்க வருமாறு தேசப்பிரிய அழைப்பு

ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறு கோரிக்கை

வாக்களிப்பில் கலந்து கொள்ளும் வாக்காளர்கள் சுகாதாரம் தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பயமின்றி தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். 

அதேவேளை பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பொலிசாரையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாகவே வீடியோ செய்வதற்கு போலிசார் தீர்மானித்துள்ளனர். அதற்கிணங்க சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை தேர்தல் தினங்களில் அவசர இடர் அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24 மணித்தியாலமும் செயற்படக்கூடிய விஷேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 0702117117,0113668031, 0113668087,0113668025 ஆகிய இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Wed, 08/05/2020 - 11:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை