இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு ஈரானில் சிறை

இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

ஈரான்–அவுஸ்ரேலிய நட்புறவு சங்கத்தின் இணைத் தலைவர் மசூத் மசாப் மற்றும் ஷஹ்ராம் சிர்கானி ஆகியோரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகி இருப்பதாக ஈரான் நீதித்துறை பேச்சாளர் கொலாம் ஹொஸைன்் இஸ்மைலி தெரிவித்துள்ளார்.  

இதில் மசாப் என்பவர் ஈரானின் அணு சக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் பற்றி இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி உளவுப் பிரிவுடன் தகவல்களை பகிர்ந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிர்கானி, பஹ்ரைனுக்காக உளவு பார்த்ததாகவும் ஈரான் வங்கி மற்றும் பாதுகாப்பு துறைகளில் முக்கிய தகவல்களை திரட்டியதோடு தமது நோக்கத்திற்காக அரச ஊழியர்களை பணியமர்த்த முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.  

முன்னதாக வெளியுறவு அமைச்சு, எரிசக்தித் துறை மற்றும் நிறுவனங்களில் ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுப் பிரிவுக்காக வேவுபார்த்த குற்றச்சாட்டில் ஜூலையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஊழியரான ராசா அஸ்கரியை தூக்கிலிட்டமை குறிப்பிடத்தக்கது.   

Wed, 08/12/2020 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை