ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் பாதுகாப்புக்கே முன்னுரிமை

இந்தியாவுக்கே முதலிடம்- - இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர்

மூலோபாய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற அணுகுமுறை பின்பற்றப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெளிவாக தெரிவித்துள்ளாரென புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ‘டைம்ஸ் ஓவ் இந்தியா’வுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில், தேசிய பாதுகாப்பே முதலாவதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள புதிய வெளிவிவகார செயலாளர், பிராந்திய  பாதுகாப்பு இல்லாமல் தேசிய பாதுகாப்பு காணப்படாதெனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொருளாதார விவகாரத்தில் இலங்கைக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் எவரையும் நாங்கள் வரவேற்கத் தயாரென ஜனாதிபதி தெரிவித்துள்ளார், கடன்களுக்கு இடமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளாரென அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை நடுநிலைமையோடு இருக்கவிரும்புகின்றது.

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புகின்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளாரெனவும் அவர் தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் விமான நிலையங்கள் போன்ற தேசிய மூலோபாய சொத்துக்களின் முழுமையான கட்டுப்பாட்டை எந்த வெளிநாட்டுக்கும் வழங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை