கடும் வரட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிபோகும் அபாயம்

பலாங்கொடை பகுதியில் கடந்த பல வாரகாலமாக நிலவிவரும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக அப்பகுதியிலுள்ள நீர் நிலைகள் வற்றி போகும் அபாயம் உருவாகிவருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமணலவெவ,பெலிஹுல்ஓய,ஹிரிகடுஓய,வளைவை ஆறு,சுரதலி எல்ல, தூவிலி எல்ல, களுபஹன, பம்பரகன்த எல்ல உட்பட பல நீர்நிலைகளில் இவ்வாறு நீர் குறைந்துள்ளதை காண முடிந்தது.

மேலும் பெலிஹுல்ஓய- பம்பஹின்ன- பலாங்கொடை- அழுத்நுவர உட்பட பல பிரதேசங்களில் 100 அடிக்கு கீழுள்ள கிணறுகள் கூட வற்றி நீர் இல்லாத நிலைமை உருவாகியுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள் குடிநீர் மற்றும் நீரின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயலாமல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்.

 

( பலாங்கொடை தினகரன் நிருபர்)

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை