வெள்ளை மாளிகைக்கு அருகே சூடு: ஜனாதிபதி வெளியேற்றம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து செய்தியாளர் சந்திப்பிலிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர். 

சில நிமிடங்களில் மீண்டும் சந்திப்பு நடந்த அறைக்குத் திரும்பிய ஜனாதிபதி டிரம்ப், சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஒருவரைச் சுட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். 

சந்தேக நபர் ஆயுதமேந்தி வந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சுடப்பட்ட நபரின் உடல்நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் டிரம்ப் கூறினார். 

முன்னதாக கொரோனா நோய்த்தொற்று குறித்த செய்தியாளர் கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஜனாதிபதியை பாதுகாப்பு அதிகாரிகள் அந்த அறையிலிருந்து அழைத்துச் சென்றனர். காரணம் ஏதும் அப்போது கூறப்படவில்லை. 

நிதியமைச்சர் ஸ்டீவ் மனுச்சின், வரவுசெலவுத் திட்ட இயக்குநர் ரஸ் வோட் உள்ளிட்ட அதிகாரிகளும் சந்திப்பு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறைக் கதவுகள் பூட்டப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

Wed, 08/12/2020 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை