பள்ளிவாசல்களை முழுமையாக திறக்க அனுமதி

தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்க பணிப்பு;

முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிக்கை

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிவாசல்களின் வளாகத்தையும்  ஏற்கெனவே கொரோனா வைரஸ் பரவல் காலத்திற்கு முன்னர் இருந்து போலவே முழு நேரமும் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த புதிய தளர்வுகளுக்கு அமைய பள்ளிவாசல்களில் அமைந்துள்ள தண்ணீர் குழாய்களையும் கழிப்பபறைகளையும் வழிபாட்டாளர்களின் பாவனைக்காக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தண்ணீர்த் தொட்டிகளைத் தொடர்ந்தும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரியின் வழிகாட்டுதல்களையும் வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Mon, 08/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை