9ஆவது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

9ஆவது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ-9th Parliament Opposition Leader-Sajith Premadasa

- அவை நடவடிக்கைகள் பி.ப. 3.00 மணி வரை ஒத்திவைப்பு

9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது அமர்வில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, அவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், அவை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பணிவிடையை வாசித்த சபாநாயகர், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் உள்ள அதிகாரத்திற்கு அமைய, பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் பாராறுமன்றம் கூடும் என அறிவித்தார்.

தொடர்ந்து அவை நடவடிக்கைகள், இன்று (20)  பிற்பகல் 3.00 மணி வரை ஒத்திவைக்கப்படுதவாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்ததோடு, கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற கன்னி அமர்வு
சபாநாயகர்: மஹிந்த யாபா அபேவர்தன
முன்மொழிவு: அமைச்சர் தினேஷ் குணவர்தன
வழிமொழிவு: ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.

பிரதி சபாநாயகர்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
முன்மொழிவு: அமைச்சர் மஹிந்த அமரவீர
வழிமொழிவு: இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஷா

குழுக்களின் பிரதித் தலைவர்: அங்கஜன் இராமநாதன்
முன்மொழிவு: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
வழிமொழிவு: இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

அவை முதல்வர்: அமைச்சர் தினேஷ் குணவர்தன
ஆளும் கட்சியின் பிரதம கொறடா: அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ

Thu, 08/20/2020 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை