Header Ads

சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி: சஹிரியன் பவர் பிளயர் 96 அணி வெற்றி

கல்முனை சாஹிரா கல்லூரியில் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற பழைய மாணவர்களான சஹிரியன்ஸ் பவர் பிளயர் 96 அணியினருக்கும் சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97 அணியினருக்குமிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நேற்று (23ம் திகதி) இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சஹிரியன் பவர் பிளயர் 96 அணியின் தலைவர் ஏ.எம்.எம். நசீர்கான் தனது அணி துடுப்பெடுத்தாடுவதற்கு இணங்க நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97 அணியினர் 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியயைத் தழுவினர். இச் சிநேபூர்வ கிரிக்கெட் சுற்றில் 10 பந்து வீச்சுகளுக்கு 26 ஓட்டங்களைப் பெற்ற சஹிரியன்ஸ் பவர் பிளயர் 96 அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஏ.சி.எம் றிபாய் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

 

யூ.கே. காலித்தீன்

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.