வெளிநாடுகளிலிருந்து 730 பேர் வருகை
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 730 பேர் இன்று (20) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கிடையில், அபுதாபியிலிருந்து 08 பேர் இன்றையதினம் இலங்கைக்கு வரவுள்ளதாக, கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கட்டாரின் டோஹாவிலிருந்து 20 பேரும், குவைத்திலிருந்து 160 பேரும், சென்னையிலிருந்து 290 பேரும், துபாயிலிருந்து 260 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும், தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
from tkn
Post a Comment