கிரீன்லாந்தில் கடந்த ஆண்டில் 586 பில். தொன் பனி உருகியது

சுற்றுச்சூழல் ரீதியாக உலகின் பருவநிலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் கிரீன்லாந்தில் 2019ஆம் ஆண்டில் மட்டும் 586 பில்லியன் தொன் பனி உருகித் தீர்த்துள்ளது. கலிபோர்னியா அளவுள்ள மாகாணத்தை 4 அடி உயரத்துக்கு நீரால் சூழும் அளவுக்கு இந்தப் பனி உருகல் அளவு கணக்கிடப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு கோடைக்காலத்தில் பனி உருகும் அளவு குறைவாக இருந்த காலம் போக 2019இல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் தொன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கெலன்கள் (532 ட்ரில்லியன் லிட்டர்கள் தண்ணீர்) அளவுக்கு பெரிய அளவில் பனி உருகியுள்ளதாக செய்மதி படங்களை வைத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஆண்டு சராசரி 259 பில்லியன் தொன் உருகல் என்பதையும் கடந்த பெரும்பனி உருகலாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2012இல் கிரீன்லாந்தில் 511 பில்லியன் தொன் அளவுக்கு பனி உருகியது. பனி உருவாக எத்தனையோ ஆண்டுகள் எடுக்கிறது. ஆனால் உருகுவது வெகுவேகமாக நடைபெறுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 586 பில்லியன் தொன் பனி உருகியதில் உலக அளவில் கடல்களில் நீர்மட்டம் 1.5 மி.மீ அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான, நினைத்துப் பார்க்க முடியாத கடல்நீர்மட்ட அதிகரிப்பாகும் என்று நாஸாவின் ஆய்வாளர் அலெக்ஸ் கார்டனர் தெரிவித்துள்ளார்.

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை