பாராளுமன்றுக்கு 50 வயதுக்கு குறைந்த 87 பேர் தெரிவு

பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலவர்கள் 50வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்களில் 50வயதுக்கு குறைந்தவர்கள் 87பேர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் தகவல் தற்பொது பாராளுமன்ற அதிகாரிகள் மூலம் Online முறைமையில் பெறப்பட்ட நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 30வயதுக்கு குறைந்தவர்கள் 5பேரும், 30 - 40வயதுக்கு உட்பட்டவர்கள் 21பேரும், 40-50வயதுக்கு உட்பட்டவர்கள் 60பேரும், 50-60வயதுக்கு உட்பட்டவர்கள் 54பேரும், 60-70வயதுக்கு உட்பட்டவர்கள் 37பேரும், 70-80வயதுக்கு உட்பட்டவர்கள் 9பேரும் 80-90வயதுக்கு உட்பட்டவர்கள் 3பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாராளுமன்றுக்கு  புதிய உறுப்பினர்கள் 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Thu, 08/20/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை