கடந்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பமான 3 ஜூலைகள் பதிவு

உலக வரலாற்றின் மிக வெப்பமான மூன்று ஜூலை மாதங்களில் கடந்த ஜூலை மாதமும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

உலகின் மிக வெப்பமான மூன்று ஜூலை மாதங்களுமே கடந்த 5 ஆண்டுகளில் பதிவானவை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவையகம் அதனைத் தெரிவித்தது.

மிதமிஞ்சிய வெப்பத்தால் வட துருவத்தில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன. அதனால் ஆர்க்டிக் கடல் பகுதிகளில் காணப்படும் பனிப்பாறைகளின் அளவு, கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

பனிப்பாறைகளை வெட்டிப் பிளந்து செல்லும் கப்பல்களின் உதவியோடு மட்டுமே சாத்தியமாகும் கடல்வழிப் போக்குவரத்து, இப்போது அதற்கான அவசியமின்றி எளிதாகி உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளில், வரும் வார இறுதியில் அனல்காற்று வீசக்கூடுமென அஞ்சப்படுகிறது.

கோடைக் காலத்தில் மட்டுமின்றி ஆண்டு முழுவதுமே வெப்பநிலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இதற்கு முன் 2019, 2016 ஆகிய ஆண்டுகளில் மிக வெப்பமான ஜூலை மாதங்கள் பதிவாயின.

பசிபிக் கடலின் மேல்மட்டச் சராசரி வெப்பம் கடந்த 40 ஆண்டுச் சராசரியைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஜூன் மாதத்திலிருந்து சைபீரியக் காடுகளில் ஏற்பட்டு வரும் காட்டுத் தீ அதிகரித்துவரும் வெப்பநிலையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.  

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை