துபாய் செல்ல முற்பட்ட தேடப்பட்டு வந்த 4 சந்தேகநபர்கள் கைது

துபாய் செல்ல முற்பட்ட தேடப்பட்டு வந்த 4 சந்தேகநபர்கள் கைது-4 Suspects Arrested at Katunayake Airport-BIA Attempt to Escape Dubai

திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றின் பிரதான துப்பாக்கி சுடும் நபராரும், கொழும்புக்கு கஞ்சா கடத்தும் பிரதான சந்தேகநபரான, 'வெல்லே சாரங்க' எனும் சந்தேகநபர் உள்ளிட்ட நால்வரை கொழும்பு குற்றவியல் பிரிவு (CCD)  கைது செய்துள்ளது.

சந்தேகநபர்கள் துபாய் செல்ல தயாரான நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர் திட்டமிட்ட குற்றங்களைப் புரியும் குழுவொன்றின் தலைவரான 'அங்கொட லொக்கா' என்பவரின் உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கதலுவ லியனகே புத்திக சஞ்சீவ எனும் குறித்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர். அத்துடன் அவர் வசமிருந்த ரூ. 2.9 மில்லியனுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளது.

ஆப்தீன் மொஹமட் சுபைர் எனப்படும் மற்றைய சந்தேகநபர், 'அங்கொட லொக்கா' என்பவரின் உதவியாளர்  என தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையடித்த சந்தேகநபர் என தெரிய வந்துள்ளது.

வெல்லே சாரங்கவுடன் கைது செய்யப்பட்ட நான்காமவர், ரணசிங்க ஆராச்சிகே இஷாரா லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர், இலங்கைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வரும் பிரதான சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Mon, 08/24/2020 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை