சம்பிக்கவிற்கு 28ம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை

கவனயீனத்துடன் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க நேற்று உத்தரவிட்டார். கவனயீனத்துடன் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இன்று  நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து இதற்கு முன்னர் அழைப்பாணை  வெ ளியிட்டுள்ளார்.

எனினும், சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்து நேற்று நீதிமன்றில் முன்னிலையான பிரதிவாதியான பாட்டளி சம்பிக்க ரணவக்க, இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதால் வேறொரு நாளை பெற்றுத் தருமாறு தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்தார். அதன்படி, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, அவரை நீதவான் நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்டிருந்த முன் பிணை அடிப்படையில் விடுவித்து உத்தரவிட்டார்.

Thu, 08/20/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை