ஒன்லைன் ஊடாக 223 எம்.பிகள் தமது தகவல்களை அனுப்பி வைப்பு

ஒன்லைன் மூலமாக 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் டிகிரி ஜெயதிலக கூறினார். ஐ.தே.க மற்றும் எமது மக்கள் சக்தி தேசியப் பட்டியல் எம்.பிக்கள் இது வரை பெயர்களை அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின்  தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்திருந்தார்.

இந்த தகவல் வழங்கும் நடவடிக்கை கடந்த சனித் கிழமை நிறைவு செய்யப்பட்டது.

கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்களை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான காலக்கெடு சனிக்கிழமை நிறைவடைந்தது.ஐ.தே.க மற்றும் எமது மக்கள் சக்தி என்பன சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டாத நிலையில் அவர்கள் தவிர்ந்த சகலரும் தமது விபரங்களை அளித்துள்ளனர்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை