'கிரிக்கெட் பிலாஸ்ட்டர் 2020' மடவளை ஓல்ட் மதீனியன்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி

கெலிஓயா விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்துள்ள 'கிரிக்கெட் பிலாஸ்ட்டர் 2020' கண்டி மாவட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மடவளை ஓல்ட் மதீனியன்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. (22.8.2020)

கண்டி பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாம் அரை இறுதிப் போட்டியில் கண்டி லிவர்பூல் விளையாட்டுப்கழகத்தை 7 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டு ஓல்ட் மதீனியன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேற்படி 40 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி ரிவர்பூல் கழகம் 29.2 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜனித் 28 பந்துகளில் 21 ஓட்டத்தையும் கே. பாண்டியன் 24 பந்துகளில் 15 ஓட்டங்களையும் மனோ 36 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றனர். அஹ்மட் ரஸூர் 8 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களையும் இன்சாப் பைசல் 5 ஓவர் பந்து வீசி 11 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு ஆடிய ஓல்ட் மதீனியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 102 ஓட்டங்களைப் பெற்றது. மொகமட் ரிபாஸ் 78 பந்துகளில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றார். முன்சிப் இம்தியாஸ் 17 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றார். எனவே மேற்படி வெற்றி மூலம் மடவல ஓல்ட் மதீனியன்ஸ் அணி எதிர்வரும் செப்டம்பர் 6ம் திகதி இடம்பெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே கம்பளை விக்கிரமபாகு கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த முதலாவது அறை இறுதிப் போட்டியில் கம்பளை ஓல்ட் சஹிரியன்ஸ் அணி கண்டி தண்டர்ஸ் அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்தம் 12 அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப் போட்டியில் லீக் அடிப்படையில் நடந்து பின்னர் நொக்கவுட் முறையில் இறுதிப் போட்டி வரை இடம் பெற்று வருகின்றன.

(அக்குறணை குறூப் நிருபர்)

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை