லத்தீன் அமெரிக்காவில் 200,000 பேர் உயிரிழப்பு

லத்தீன் அமெரிக்காவில் கொவிட்–19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியது.

கொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதியாக உருவெடுத்துள்ள லத்தீன் அமெரிக்காவில் நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதாக அஞ்சப்படுகிறது.

பிரேசில், மெக்சிக்கோ, பெரு ஆகியவை லத்தீன் அமெரிக்க வட்டாரத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும்.

பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர அவை திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் பிராந்திய அளவில் உயிரிழந்த சுமார் 70 வீதத்தினர் பிரேசில், மெக்சிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை