Header Ads

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேநேரம் இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் இறுதி போட்டி 4ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.