Header Ads

கொவிட்–19: நாளாந்த தொற்று சம்பவங்களில் பெரும் அதிகரிப்பு

உலகெங்கும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 294,237 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி நோய்த் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 21,026,758 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்–19 தொற்றினால் உலகெங்கும் 755,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் மேலும் 9,985 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக அமெரிக்க பிராந்தியங்களில் 11.2 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு, கடந்த சனிக்கிழமை மேலும் 161,772 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஐரோப்பாவில் மொத்தம் 3.7 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 213,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.