கொவிட்–19 தடுப்பு மருந்தினை பெற 5.7 பில்லியன் முன்பதிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் செயல்திறன் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும் உலகெங்கும் அவ்வாறான மருந்தை பெற 5.7பில்லியன் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேற்கத்திய நாடுகளின் ஆய்வு கூடங்களில் மேம்படுத்தப்படும் கொவிட்–19தடுப்பு மருந்தை விரைவாக பெற அமெரிக்கா முன்பதிவு செய்துள்ளது. 

மொத்தம் 5தடுப்பூசிகள் மூன்றாம் கட்டச் சோதனையில் உள்ளன. அதில் மூன்று மேற்கத்திய நாடுகளில் சோதிக்கப்படுபவை. எஞ்சிய இரண்டும் சீனாவைச் சேர்ந்தவை. ஆயிரக்கணக்கானோர் சோதனையில் பங்கேற்று வருகின்றனர். 

இதில் முதல் நாடாக “ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் உலகெங்கும் உள்ள ஆய்வுகூடங்கள் தமது தடுப்பு மருந்தை மேம்படுத்தும் போட்டியில் தீவிரம் காட்டியுள்ளன.  

இஸ்ட்ராசெனகா மருந்தக நிறுவனத்துடன் இணைந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சோதித்து வரும் தடுப்பு மருந்தின் முடிவுகள் செப்டெம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மொடர்னா நிறுவனம் மேம்படுத்தும் தடுப்பு மருந்தை ஆண்டு இறுதியில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள அமெரிக்கா, ஜோன்சன்அன்ட்ஜோன்சன், ஆஸ்ட்ராஜெனகா, பைசர், பயோஅன்டெக், சனோபி, கிளாக்ஸோ ஆகிய நிறுவனங்களுடனும் தடுப்பூசி ஒப்பந்தம் செய்துள்ளது.   

Thu, 08/13/2020 - 13:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை