Header Ads

19ஐ இரத்துச் செய்து 20ஐ தயாரிக்க அமைச்சரவை அனுமதி

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து, 20ஆவது திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து 20ஆவது திருத்தத்தை தயாரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகம் செய்வதாக அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. முதற்கட்டமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் 19ஆவது திருதத்தை இரத்து செய்து 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதாகவும் அரசு கூறியிருந்தது.  

இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஆலோசனை வழங்கியிருந்தார்கள்.இது தொடர்பாக அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து நேற்று முன்வைத்துள்ளார். அமைச்சர்கள் பலரும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் உடனடியாக 20ஆவது திருத்தத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  

இது தொடர்பில் முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக குறைக்கும் திருத்தமோ இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக நீடிக்க முடியாது என்ற திருத்தமோ மாற்றப்படாது.ஜனாதிபதியின் கையை கட்டிப் போடும் வகையிலான விடயங்கள் மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.  19 ஆவது திருத்தத்தை மாற்ற வேண்டும் என ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு கட்சிகள் பலவும் கூறி வந்தது தெரிந்ததே.(பா)

ஷம்ஸ் பாஹிம்  

Thu, 08/20/2020 - 08:33


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.