கொவிட்–19: அமெரிக்காவில் உயிரிழப்பு 180,000ஆக உயர்வு

அமெரிக்காவில் கொவிட்–19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 180,000ஐத் தாண்டியுள்ளது.

அயோவா, மினசோட்டா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவருகிறது.

நாடளவில் புதிதாய்ப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் குறைந்துவந்தாலும் மத்தியமேற்கு மாநிலங்கள் அபாய நிலையை எட்டியுள்ளன.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாலும், குளிர்காலம் ஆரம்பிக்கவிருப்பதாலும் ஒரே இடத்தில் அதிகமானோர் கூட வாய்ப்புள்ளது.

அதனால் அமெரிக்காவில் மீண்டும் பெரிய அளவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 5.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அங்கு 100,000 பேரில் 1,774 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்; நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 54 பேர் உயிரிழக்கின்றனர்.

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை