அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ 18 ஆம் திகதி கடமையேற்கிறார்

நாட்டின் 18 ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். தேசிய விளையாட்டு அணி ஒன்றின் அங்கம் வகித்த மற்றும் தேசிய விளையாட்டு அணி ஒன்றின் தலைவராக செயற்பட்ட மற்றும் தேசிய விளையாட்டு அணியொன்றுக்கு அணித்தலைவராக செயற்பட்ட ஒருவர் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்பது இலங்கை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்கள் சேவைகள் அமைச்சராக கடந்த 12 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துக்கொண்ட அமைச்சராக விளங்குகிறார்.

றகர் விளையாட்டில் சிறந்து விளங்கிய நாமல் ராஜபக்ச, 2004 இல் இலங்கை இளையோர் றக்பி அணியின் தலைவராகவும், 2005 இல் கல்கிஸ்ச பரிசுத்த தோமாவின் கல்லூரி றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன் 2013 இல் இலங்கை தேசிய றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், தேசிய இளைஞர்கள் சேவைகள் உள்ளிட்ட 08 நிறுவன அமைப்புக்கள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கீழ் இயங்கும்.

நாட்டின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சராக வீ.ஏ.சுகததாச செயற்பட்டதுடன் இறுதியாக டலஸ் அழகப்பெரும கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை