Header Ads

நியூசிலாந்தில் புதிதாக 14 கொரோனா தொற்று

நியூசிலாந்தின் பெரிய நகரான ஒக்லாந்து முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 14 புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு மேலாக உள்நாட்டில் எந்த தொற்று சம்பவமும் அடையாளம் காணப்படாத நிலையில் இந்த வார ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தில் பதினான்கு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் இந்தக் குடும்பத்துடன் தொடர்புபட்டே 13 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு வெளிநாட்டில் இருந்து வந்து சுய தனிமையில் இருக்கும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒக்லாந்தில் கடந்த புதன்கிழமையே மூன்று நாள் முடக்க நிலை அமுலுக்கு வந்தது.

“நாம் இருக்கும் தீவர நிலைமையை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார். “அமைதியான மற்றும் திட்டமிட்ட வழியில் விரைவாக இதனை கையாள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக அண்மையில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமருக்கும வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/14/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.