12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிள்ளைகள் முகக்கவசம் அணிவதற்கான வழிகாட்டலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி தமது நாடு மற்றும் பிரதேசத்தில் பெரியவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களிடையே கொவிட்–19 தொற்று பரவல் பற்றி புரிதல் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டபோதும், பெரியவர்கள் போன்று பதின்ம வயதினருக்கும் நோய் தொற்றுவது ஆதாரங்களை மேற்கோள் காட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகமாக இருந்தால் 6 வயதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் முகக்கவசங்கள் அணியலாம். 5 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை