பிலிப்பைன்ஸில் இரு குண்டு தாக்குதல்களில் 10 பேர் பலி

இஸ்லாமிய போராளிகள் பலம் கொண்ட தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு ஒன்றில் தற்கொலை தாக்குதல்தாரி ஒருவர் நடத்திய இரட்டை குண்டு தாக்குதல்களில் 10பேர் கொல்லப்பட்டிருப்பதோடு படையினர் மற்றும் பொலிஸார் உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அபூ சையாப் குழுவுடன் அரச ஆதரவு படையினர் நீண்ட காலமாக போராடி வரும் முஸ்லிம் பெரும்பான்மை சுலுவின் ஜோலோ நகரில் நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சந்தை ஒன்றுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு முதலில் வெடித்து ஐந்து படையினர் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் கொர்லெடோ வின்லுவான தெரிவித்தார். 

இதில் 20பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வீதியில் பொலிஸார் நிலைகொண்டிருக்கும் பகுதியில் பெண் தற்கொலைதாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் இரண்டாவது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு ஆறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.  

தமது முன்னோர்கள் வாழ்ந்த தெற்கு பிராந்தியமான மின்டானோவில் சுதந்திரம் கேட்டு அபூ செய்யாப் நீண்ட காலமாக போராடி வருகிறது.

Tue, 08/25/2020 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை