ஜனாதிபதி ஆலோசனை; வருடத்திற்கு ரூபா 1,000 கோடி மீதமாகும்

தனியார் கட்டடங்களில் இயங்கும் அனைத்து அமைச்சுக்களையும் அரச நிறுவனங்களையும் அரச கட்டடங்களுக்கு மாற்றுவதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். 

இதன்மூலம் வருடத்திற்கு 1,000 கோடிவரை சேமிக்க முடியும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

தனியார் கட்டடத் தொகுதிகளிலியங்கும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடத் தொகுதிகளுக்கு மாற்றுவதற்கான பணிகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தனியார் கட்டடத் தொகுதியில் இயங்கிய விவசாய அமைச்சு, ஜனாதிபதியின் தலையீட்டுடன் விவசாய சபைக்கு மாற்றப்பட்டிருந்தது. அதேபோன்று தனியார் கட்டடத் தொகுதிகளில் கடந்த காலத்தில் இயங்கிய 30 வரையான அமைச்சுகளும் அரச நிறுவனங்களும் அரச கட்டடத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Sun, 08/16/2020 - 07:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை