போமியுலா - 01 கார்பந்தயம்: ஹமில்டன் சம்பியன்

இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 01.283 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டி சென்றார். போமியுலா-01 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.

இதில் 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் பங்கேற்று இலக்கை நோக்கி காரை செலுத்தினர். 306.198 கிலோமீற்றர் பந்தய தூரத்தை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 01.283 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டி சென்றார்.

கடைசி நிமிடத்தில் ஹமில்டனின் காரின் முன்பக்க டயர் ஒன்று பஞ்சரானது. ஆனாலும் சமாளித்து இலக்கை மின்னல் வேகத்தில் எட்டி பிரமாதப்படுத்தினார்.

பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் அவர் வெற்றியை ருசிப்பது இது 7-வது முறையாகும். இந்த பருவகாலத்தில் இது 3-வது வெற்றியாகும்.

ஹமில்டனை விட 5.8 வினாடி மட்டுமே பின்தங்கிய மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேசுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஜெர்மனி வீரர் நிகோ ஹல்கென்பர்க்கின் கார் பழுதடைந்து அதை சரி செய்ய முடியாததால் அவர் களம் இறங்க முடியவில்லை.

இதுவரை நடந்துள்ள 4 சுற்று முடிவில் ஹாமில்டன் 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 5-வது சுற்று பந்தயமும் இதே இடத்தில் எதிர்வரும் 9-ம் திகதி நடக்கிறது.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை