தகாத உறவு: நியூசிலாந்தின் மூத்த அமைச்சர் பணிநீக்கம்

முன்னாள் ஊழியருடன் தகாத உறவில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் இயன் லீஸ் கொலோவை பிரதமர் ஜெசின்டா ஆர்டன் பதவி நீக்கியுள்ளார்.  

குடிவரவுத்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தவறி விட்டதாக ஆர்டன் கூறினார். 

ஊழியருடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் கூறப்பட்டது தொடர்பில் இயனிடம் விளக்கம் கேட்டபோது, அது தங்கள் இருவருக்கும் இடையிலான ஒருமித்த உறவு என்று அவர் பதிலளித்ததாக ஆர்டன் தெரிவித்தார். 

எனினும் திருமணம் முடித்து மூன்று குழந்தைகளின் தந்தையான இயன், தமது நடத்தை முற்றிலும் முறையற்றது என்று சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டதோடு தமது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.  

செப்டம்பர் மாதம் நியூஸிலாந்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. தேர்தலில், ஆர்டனின் தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதில் அவருடைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.   

Thu, 07/23/2020 - 10:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை