கொங்கோவில் 'எபோலா' வைரஸ் பரவல் அதிகரிப்பு

கொங்கோ நாட்டின் வடமேற்கு பகுதியில் எபோலா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இகுவேடுர் மாகாணத்தின் போக்குவரத்து மையமாக இருக்கும் ம்பண்டாக் நகரில் கடந்த ஜூன் 1 ஆம் திகதி தொடக்கம் 22 உயிரிழப்புகளுடன் 54 நோய்த் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் நான்கு சந்தேகத்திற்கு இடமான சம்பவங்களும் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் கொங்கோவில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது 11 ஆவது தடவையாகும்.

இந்த புதிய எண்ணிக்கை கவலை தருவதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இரத்தம், உடல் திரவங்களினால் தொற்றும் இந்த வைரஸ் 90 வீதம் வரை உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொங்கோ கொரோனா வைரஸ் தொற்றினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8,249 நோய்த் தொற்று சம்பவங்களுடன் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை