கருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விநாயகமூருத்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால்  இம் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், யுத்த காலத்தில் ஆனையிறவு களமுனையில் 02 ஆயிரம் தொடக்கம் 03 ஆயிரம் படையினரை தான் கொன்றதாக கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், கருணாவை கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இவ்வாறிருக்கையில், கருணாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவரைக் கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு, கடுவெல நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை