சர்வதேச சட்டத்தை மீறியதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

ஈரானிய இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்கிக் கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐ.நா நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் தலைநகர் பக்தாதின் விமானநிலையத்தில் வைத்து கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானியுடன் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான அக்னெஸ் கல்லமார்ட், இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் அச்சுறுத்தல் பற்றி அமெரிக்கா போதுமான ஆதாரங்களை தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் தீவிரவாதிகளுக்கு அனுமதி அளிக்கிறார் என்று இது பற்றி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சாடியுள்ளது.

இந்த கொலை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மேலும் 35 பேருக்கு ஈரான் கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் உயர்மட்டத் தலைவருக்கு அடுத்து ஈரானின் செல்வாக்கு மிக்கவராக சுலைமானி கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை