தெஹிவளை தனியார் வங்கி கணக்குகளை நீக்குமாறு ஜம்இயத்துல் உலமா கூறவில்லை

உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புரை​

தெஹிவளையிலுள்ள தனியார் வங்கிக் கிளையொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து அவ்வங்கியுடனான கணக்குகளை இரத்து செய்யுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறது என்ற தலைமைப்பில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவ்வாறு ஜம்இய்யா கூறவில்லை என்றும் அகில இலங்கை ஜம்இயயத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 

கடந்த வாரம் தெஹிவளை பகுதியில் உள்ள தனியார் வங்கிக் கிளையொன்றில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமுகமாக தீர்த்துக்கொள்வதே சிறந்தது. 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது. குறித்த வங்கியின் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை. முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் ஜம்இய்யதுல் உலமா மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதிசெய்து கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா மேலும் கேட்டுக் கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

Wed, 07/08/2020 - 05:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை