பூமியை கடக்கவுள்ள ஆபத்தான விண்கல்

பெரிய விண்கல் ஒன்று வரும் 24 ஆம் திகதி பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா குறிப்பிட்டுள்ளது.

2020 ஏ.டி என்று அழைக்கப்படும் இந்த விண்கல் மணிக்கு 48 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் பூமிக்கு அருகால் கடந்து செல்லவிருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

170 மீற்றர் நீளமுள்ள இந்த விண்கல் 50 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடக்கவுள்ளது. பூமிக்கு அருகே 75 இலட்சம் கி.மீ. தொலைவு அல்லது அதற்கும் குறைவான துாரத்தில் கடக்கும் விண்கற்கள் அபாயகரமான விண்கற்கள் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூரிய குடும்பம் உருவானதை அடுத்து விண்வெளியில் விடுபட்ட பாறைகளே விண்கற்களாக உள்ளன.

வியாழன் மற்றும் செவ்வாய்க் கிரகங்களுக்கு இடையே இருக்கும் சிறுகோள் பட்டையில்  இந்த விண்கற்களை பொதுவாகக் காண முடிவதோடு அவை கிரகங்களையும் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Tue, 07/21/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை