ஷெல் நிறுவன சொத்து மதிப்பில் பெரும் இழப்பு

எண்ணெய் விலை வீழ்ச்சி:

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான ஷெல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் அதன் சொத்துக்களின் மதிப்புச் சுமார் 22 பில்லியன் டொலர் குறையலாம் என கூறியுள்ளது.

ஒரு பீப்பாய் எண்ணெய் இந்த ஆண்டு 35 டொலருக்கும் அடுத்த ஆண்டு 40 டொலருக்கும் விற்பனையாகும் என ஷெல் எதிர்பார்க்கிறது.

பல உலக நாடுகள் கொவிட்–19 நோய்ப்பரவலால் தற்போது முடக்க நிலையில் உள்ளன. பலரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

வரும் மாதங்களில் தனி நபர்கள், அரசாங்கங்கள், நிறுவனங்கள் எடுக்கும் முடிவை பொருத்து எண்ணெய் சார்ந்த நிறுவனங்களின் எதிர்காலம் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற்காலத்தில் இயற்கை எரிசக்தி அதிகளவில் பயன்படுத்தப்பட்டால் எண்ணெய்க்கான தேவை குறையும், விலையும் குறையும். அந்தச் சூழ்நிலையை எதிர்நோக்க ஷெல் நிறுவனம் மெல்லமெல்லத் தயாராகிவருகிறது. இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத எரிபொருள்களை அது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

அதைப் போன்றே மற்ற எண்ணெய் நிறுவனங்களும் தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், அந்த மாற்றங்கள் சற்று மெதுவாக உள்ளனவா என்ற கேள்வி சந்தை ஆய்வாளர்களிடம் எழுந்துள்ளது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை