பென் ஸ்டோக்ஸ்க்கு கிடைக்கும் பாராட்டு எனக்கு கிடைக்கவில்லை

ஜேசன் ஹோல்டர்

பென் ஸ்டோக்ஸ் - ஜேசன் ஹோல்டர் இடையிலான போட்டி என்றும் கூறும் நிலையில், தனக்கு போதுமான பாராட்டு கிடைக்கவில்லை என்று ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. மேற்கிந்திய தீவு அணிக்கு ஜேசன் ஹோல்டரும், இங்கிலாந்து அணிக்கும் பென் ஸ்டோக்ஸும் கேப்டனாக உள்ளனர்.

இருவரும் தலைசிறந்த சகலதுறை வீரர்கள். ஐசிசி டெஸ்ட் சகலதுறைவீரர்கள் வரிசையில் ஹோல்டர் முதல் இடத்திலும், பென் ஸ்டோன்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தத் தொடர் இரண்டு ஆல்ரவுண்டர்களுக்கு இடையிலான போட்டி என்றே கூறப்படுகிறது.

ஆனால் தனக்கு தகுதி இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் போன்று பாராட்டு கிடைக்கவில்லை என்று ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘தனிப்பட்ட பாராட்டு அல்லது ஐசிசி தரவரிசை ஆகியவற்றை நான் உண்மையிலே விரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் எப்போதுமே சிறந்த வீரராக பேசப்படுகிறார். ஆகவே அவர் நல்ல கிரிக்கெட் வீரர். ஆனால், ஐசிசி தரவரிசை நான் முதனிலை சகல துறை வீரர் என்று சொல்கிறது. எனது தகுதிக்கு ஏற்ற வகையில் நான் பாராட்டுக்களை பெறாமல் இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?.

அந்த விஷயத்தையே பிடித்துக் கொண்டிருக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அவர்களுடைய பக்கத்தில் அவர்களை பற்றி எழுதுகிறார்கள். நான் இங்கே கிரிக்கெட் விளையாட மட்டுமே வந்துள்ளேன். பென் ஸ்டோக்ஸ் போன்ற போட்டியாளர்களை நேருக்குநேர் எதிர்கொள்ளும்போது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும்’’ என்றார்.

 

Sat, 07/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை