புற்று நோயை கண்டுபிடிக்க புதிய இரத்தப் பரிசோதனை

சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

அறிகுறிகள் தோன்றுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே புற்றுநோயை அடையாளம் காணும் இரத்தப் பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் பின்னர் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டோரில் 95 வீதத்தினரை அந்தப் பரிசோதனை சரியாக கணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பேன்சீர் எனப்படும் அந்தப் பரிசோதனை முறை சீன ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது. 400க்கும் அதிகமானோரின் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

மற்ற சோதனை முறைகளால் அடையாளம் காணப்படாத புற்றுநோய் அணுக்களை அந்தப் பரிசோதனை கண்டுபிடிப்பதாகக் கூறப்பட்டது. அறுவை சிகிச்சை இன்றி செய்யப்படும் இவ்வகைப் பரிசோதனைகள் குறித்து அண்மைய ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன.

இரத்தத்தில் உள்ள மெத்தில் குழுக்கள் எனப்படும் கூறுகளைக் கண்டுபிடித்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் அந்தக் கூறுகள் புற்றுநோயுடன் தொடர்புகொண்டவையா என்பதைப் பரிசோதனை உறுதிபடுத்துகிறது.

பரிசோதனை முறையை மேலும் உறுதிப்படுத்த அது இன்னும் பெரிய அளவில் சோதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Sat, 07/25/2020 - 06:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை