இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், முதல் வார போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.பி.எல். தொடரின் நடப்பு அத்தியாயம், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இந்தத் தொடர் செப்டம்பர் 16ஆம் திகதி முடிவடைகிறது.

ஆகையால், ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாவதற்கு மூன்று நாட்களுக்குள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வீரர்கள் வந்து விடுவார்கள். தற்போது கொரோனா வைரஸ் காலம் என்பதால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் வந்த உடன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொவிட்-19 சோதனை என வந்தால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அந்தந்த அணியில் இணைவார்கள். இதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதனால், முதல் வார போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர், ஸ்மித், கம்மின்ஸ் போன்ற வீரர்களும், இங்கிலாந்தின் பட்லர், பேர்ஸ்டோவ், ஆர்சர் போன்ற வீரர்களும் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை