கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் குறித்து சி.ஐ.டி தீவிர கண்காணிப்பு

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குறித்து உண்மைக்குப்புறமான தகவல்கள் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளதுடன், வதந்திகளும் சமூகப் பரவலடைந்து வருகின்றன.  

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு பொலிஸார் கடும் விடுத்திருந்தனர். என்றாலும் தொடர்ந்து வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலடைவது குறைவடையாத பின்புலத்திலேயே போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் சி.ஐ.டியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Mon, 07/13/2020 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை