அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் காலமானார்

"அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் பேரி ஜார்மன் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84.சமீபகாலமாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். 1959-ல் 23 வயதில் கான்பூரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானார். 19 டெஸ்ட்களில் விளையாடி 33 வயதில் ஓய்வு பெற்றார்.ஐசிசி ஆட்ட நடுவராக 1995 முதல் 2001 வரை 25 டெஸ்டுகள், 28 ஒருநாள் ஆட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

2000-ம் ஆண்டு சென்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸையும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸையும் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் டிக்ளேர் செய்தன. மழை காரணமாக 3 நாள் ஆட்டம் தடைபட்டதால் இந்த முடிவை எடுத்தன. கடைசியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 249 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது இங்கிலாந்து அணி. இந்தப் புகழ்பெற்ற ஆட்டத்தில் பேரி ஜார்மன் நடுவராகப் பணியாற்றினார்.பேரி ஜார்மனின் மறைவுக்கு அவுஸ்திரேலிய வீரர்களும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை