கொரோனாவுக்குப் பின் கிரிக்கெட்டில் புதிய விதிகள்

கொரோனாவால் தடைபட்ட கிரிக்கெட் உலகம் நேற்று முதல் மீண்டும் துவங்குகிறது.இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்திய தீவு அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று சவுத்தாம்ப்டன், ஏஜஸ் பவுல் மைதானத்தில் ஆரம்பமானது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிரிக்கெட்டில் பல புதிய விதிகள் வந்தன. இதன் படி, பந்தை பளபளபாக்க பந்துவீச்சாளர்கள் எச்சில் பயன்படுத்தக் கூடாது. வியர்வைக்கு அனுமதி உண்டு.டெஸ்ட் தொடரை காண இரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ‘தொலைக்காட்சியில் மட்டும் கண்டு இரசிக்கலாம். வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்க, கைதட்டிக் கொள்ளக் கூடாது.  

மாறாக ஒருவருக்கு ஒருவர் முழங்கைகளை இடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். 

தனியாக நடனம் ஆடிக் கொள்ளலாம். நடுவரிடம் கண்ணாடி, தொப்பி, துண்டு என எவ்வித பொருட்களையும் வீரர்கள் கொடுக்கக் கூடாது. பந்தை தொடும் வீரர்கள் அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கண்கள், மூக்கு, உதடுகளை தொடக் கூடாது. நடுவர்கள் ‘கிளவ்ஸ்’ அணிய அனுமதி. மாற்று வீரர் போட்டி நாட்களில் இரு அணி வீரர்களுக்கும் தொடர்ந்து கொரோனா சோதனை நடக்கும். ஏதாவது ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மாற்று வீரர் களமிறங்கலாம். 

போட்டியில் களமிறங்கும் உள்ளூர் நடுவர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது.  

இதனால் ஒரு அணிக்கு ஒரு இன்னிங்சில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை வாய்ப்பு 3 ஆக அதிகரிக்கப்பட்டது.

Thu, 07/09/2020 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை