திருகோணேஸ்வரர் ஆலயம் சம்பந்தர் பதிகம் பாடிய தலம்

மேதானந்த தேரரின் கருத்துக்கு அங்கஜன் பதில்

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திருஞானசம்மந்த பெருமான் பதிகம் பாடிய பெருந்தலத்தை பற்றி அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இந்து மக்களின் வரலாற்று தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக  விளங்கும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் கருத்து வெளியிட்டமையை ஏற்று கொள்ள முடியாது.

கி.பி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்மந்த பெருமான் தேவார பதிகம் பாடிய திருத்தலமாக குறித்த ஆலயம் விளங்குவதோடு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணன் சிவபூஜை செய்த திருத்தலமாகவும் குறித்த ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்ர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் புகழிடமாக விளங்குகின்ற வெடுக்குநாறி, செம்மலை நீராவியடி, அரிசி மலை, திரியாய் கண்ணியா, மத்தலவள முதலான 15 பிரதேசங்களை உள்ளடக்கி கதிர்காமம் வரை தமிழர்களின் புராதான அகழ்வாராய்சி பகுதிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 07/10/2020 - 06:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை